மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கொழும்பு ஹோகாஹம விளையாட்டு மைதானத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை குறித்த விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது.
இப்போட்டியில், யாழ்ப்பாணத்தில் இருந்து 17 வீரர்கள் 20 விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இன்றைய தினம் புதன்கிழமை கொழும்பு நோக்கி புறப்படுகிறனர்.
அதன் போது, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு வீரர்களை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
இந் நிகழ்வில், பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர்,சுரேந்திரநாதன் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
வீரர்களுடன் உத்தியோகத்தர்கள் மற்றும் பாதுகாவலளர்கள் என 37 பேர் பயணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.