சென்னை: தமிழக மின்சார வாரியம், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு தீர்வு காண்பதற்காக, இன்று (ஏப். 5) காலை 11 மணிமுதல் மாலை 5 மணிவரை தமிழகத்தில் உள்ள அனைத்து மின்வாரிய செயற்பொறியாளர்கள் அலுவலங்களிலும் ஒருநாள் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
சென்னையில் 19 கோட்டங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதன்படி, மயிலாப்பூர் கோட்டத்தில், வள்ளுவர் கோட்டம் துணைமின் நிலையம், எழும்பூர் கோட்டத்தில், எழும்பூர் துணைமின் நிலையம், அண்ணா சாலை கோட்டத்தில் சிந்தாதிரிபேட்டை, தி.நகர் கோட்டத் தில் மாம்பலம் துணை மின் நிலையம், பெரம்பூர் கோட்டத்தில் செம்பியம் துணைமின் நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது.
இதேபோல், தண்டையார்பேட்டை கோட்டத்தில் தண்டையார்பேட்டை, வியாசர்பாடி கோட்டத்தில் வியாசர்பாடி தொழிற்பேட்டை துணைமின் நிலைய வளாகம், பொன்னேரி கோட்டத்தில், வெண்பாக்கம் துணைமின் நிலைய வளாகம், அம்பத்தூர் கோட்டத்தில் எஸ்டேட் துணைமின் நிலைய வளாகம், ஆவடி கோட்டத்தில் ஆவடியிலும், அண்ணா நகர் கோட்டத்தில் 11-வது பிரதான சாலை, கிண்டி கோட்டத்தில் கே.கே.நகர், போரூர் கோட்டத்தில் எஸ்.ஆர்.எம்.சி. துணைமின் நிலைய வளாகம், கே.கே.நகர் கோட்டத்தில் கே.கே. நகர், அடையாறு கோட்டத்தில் வேளச்சேரி துணைமின் நிலைய வளாகம், தாம்பரம் கோட்டத்தில் புதுத்தாங்கல் துணைமின் நிலையவளாகம், சோழிங்கநல்லூர் கோட்டத்தில் துணைமின் நிலைய வளாகம், குளோபல் மருத்துவமனை அருகில், சேரன் நகர், பல்லாவரம் கோட்டத்தில் துணைமின் நிலைய வளாகம், ஐ.டி.காரிடார் கோட்டத்தில்டைடல் பார்க் துணைமின் நிலைய வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் மின் நுகர்வோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.