ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா ரன்கள் ஏதுமின்றியும், ரியான் ரிக்கெல்டன் 13 ரன்னிலும், வில் ஜேக்ஸ் 11 ரன்னிலும் விக்கெட்டை இழந்தனர்.
பின்னர் இணைந்த சூர்யகுமார் யாதவ் – திலக் வர்மா இணை ஓரளவு தாக்குப்பிடித்து ஸ்கோரை உயர்த்தினர். இதில் சூர்யகுமார் யாதவ் 29 ரன்னிலும், திலக் வர்மா 31 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதியில் தீபக் சஹார் 28 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளையும், கலீல் அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரச்சின் ரவிந்திரா 45 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர் இரண்டு பவுண்டரியுடன் 65 ரன்கள் களத்தில் இருந்தார். மும்பை அணி தரப்பில் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் சிஎஸ்கே அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி செய்த ஸ்டம்பிங் ரசிகர்களை பழைய நினைவிற்கு அழைத்துச் சென்றுள்ளது.
அதன்படி இன்னிங்ஸின் 11ஆவது ஓவரை நூர் அஹ்மத் வீசிய நிலையில் அந்த ஓவரைன் மூன்றாவது பந்தை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ் இறங்கி ஆட முயற்சி செய்து பந்தை தவறவிட்டார்.
அப்போது ஸ்டம்பிற்கு பின்னால் இருந்த தோனி, பந்தை பிடித்து மின்னல் வேக ஸ்டம்பிங்கை செய்து அசத்தினார். இந்நிலையில் தோனியின் இந்த ஸ்டம்பிங் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!