முதல் வெற்றியை பதிவுசெய்து அசத்தினார் மார்கோ பெஸ்ஸெய்ச்சி

22 கட்டங்களை கொண்ட இப்பருவ காலத்திற்கான motogp world championship தொடர் ஆரம்பமாகியுள்ளது. முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் முன்னாள் சம்பியன் மார்க் மார்க்கஸ் வெற்றிப்பெற்றிருந்தார். மூன்றாவது கட்டப்போட்டியில் பன்யாய்யா வெற்றிப்பெற்றார். 4வது கட்டப்போட்டியில் மீண்டும் மார்க் மார்க்க வெற்றிப்பெற்றார். 5வது கட்ட போட்டியில் அலெக்ஸ் மார்க்கஸ் மோட்டர்ஜீபி வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தினார். 6வது கட்ட போட்டியில் ஸார்கோ வெற்றிப்பெற்று அசத்த 7வது கட்ட போட்டி பிரித்தானியாவில் இடம்பெற்றது.

20 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் ஆரம்பமே அதிர்ச்சியளித்தார் அலெக்ஸ் மார்க்கஸ். அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது. பின்னர் மார்க் மார்க்கஸ் முதலிடத்தில் போட்டியை தொடர்ந்தார். மார்க் மார்க்கஸ் மற்றும் அலெக்ஸ் மார்க்கஸிற்கிடையில் 20 புள்ளிகள் வித்தியாசமே காணப்பட்ட நிலையில் அவரது விபத்துக்குள்ளானது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத நிகழ்வாக அலெக்ஸ் மார்க்கஸின் அண்ணனும் இப்பருவகாலத்தின் முன்னனியில் உள்ள மார்க் மார்க்கஸின் வாகனமும் அவரது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக சிவப்புக்கொடி காண்பிக்கப்பட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டது. காரணம் பல வீரர்களின் வாகனம் விபத்தை சந்திக்க பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு போட்டி மீண்டும் ஆரம்பமாகியது.

தவறவிட்ட அனைவருக்கும் கிடைத்த நல்லதொரு வாய்ப்பாக இது அமைந்ததோடு மாரக் மார்க்கஸ் முதலிடத்திலும் பன்யய்யா இரண்டாமிடத்திலும் அலெக்ஸ் மார்க்கஸ் 3மிடத்திலும் போட்டியை தொடர்ந்தனர். குடராரோவும் போட்டியில் முன்னிலையானார். 19 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் 2வது சுற்றில் குடராரோ முதலிடத்தில் போட்டியை தொடர்ந்தார். மார்க் மார்க்கஸ் 4 மிடத்திற்கு பின்தள்ளப்பட்டதுடன் அலெக்ஸ் மார்க்கஸ் 6 மிடத்தில் போட்டியை தொடர்ந்தார். முதலிடத்திலிருந்த குடராரோவுக்கும் இரண்டாமிடத்தில் இருந்த மில்லருக்கும் பாரிய இடைவெளி காணப்பட்டது.

3வது சுற்றில் வைத்து ஏற்பட்ட சிறிய தடுமாற்றத்தால் மார்க் மார்க்கஸ் 9மிடத்திற்கு பின்தள்ளப்பட்டதுடன் அவரது சக போட்டியாளரான பன்யய்யா 10மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார். 4வது சுற்றில் வைத்து 13மிடத்திற்கு பின்தள்ளப்பட்டிருந்த பன்யய்யா எதிர்பாரத விபத்தை சந்தித்தார் இதனால் அவர் போட்டியிருந்து வெளியேறினார்.

6வது சுற்றில் வைத்து இத்தாலிய வீரர் பெஸ்ஸெய்ச்சி இரண்;டாமிடத்திற்கு முன்னேறி அசத்தினார். மில்லர் 3மிடத்தில் போட்டியை தொடர்ந்தார். பின்னர் ஸார்கோ மில்லழர பின்னருக்கு தள்ளி 3மிடத்திற்கு முன்னேற போட்டி விறுவிறுப்படைய தொடங்கியது.

7வது சுற்றும் ஆரம்பமாகிய நிலையில் இரண்டாமிடத்திற்கான போட்டி சூடுபிடித்தது. மார்க் மார்க்கஸ் 8மிடத்திலும் அலெக்ஸ் மார்க்கஸ் 6மிடத்திலும் போட்டியை தொடர 12வது சுற்றிலும் குடராரோ முதலிடத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விடயமாக பஸ்ஸெய்ச்சி குடராரோவை பின்னுக்கு முதலிடத்திற்கு முன்னேறினார். யாரும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக குடராரோவின் வெற்றிக்கனவை பறித்தார் பெஸ்ஸெய்ச்சி.

12வது சுற்றில் போட்டியின் நிலை மாற தொடங்கியது. மார்க் மார்க்கஸ் 3மிடத்திற்கு முன்னேறியிருந்ததுடன் குடராரோ அதிர்ச்சியளிக்கும் வண்ணம் 12மிடத்திற்கு பின்தள்ளப்பட்டார். அதேபோன்று போட்டி தொடங்கியபோது 10மிடத்திலிருந்த மார்கோ பெஸ்ஸெய்ச்சி 12வது சுற்றில் வைத்து முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

பின்னர் 19 சுற்றுக்களையும் 38 நிமிடங்கள் 16 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து பிரிட்டிஸ் குரோன்ப்ரீ சம்யினாக மாறினார். ஸார்கோ இரண்டாமிடத்திலும் மார்க் மார்க்கஸ் 3மிடத்தையும் பெற்றுக்கொண்டனர். பெஸ்ஸச்சியின் இப்பருவகாலத்தின் முதல் வெற்றியாக இது பதிவானது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!