முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு, பிரபல பாதாள உலகப் பிரமுகர் ஒருவரிடமிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் பதில் பொலிஸ்மா அதிபர் ஒருவரிடமும் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜூலை 5 ஆம் திகதி, துபாயில் வசிக்கும் இலங்கை பாதாள உலகக் குற்றக் கும்பல் தலைவரிடமிருந்து முன்னாள் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்கு பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டிரான் அலஸ் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, குறிப்பாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற பாதாள உலகத் தலைவர்கள் மற்றும் அவர்களது நண்பர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான அவரது உத்தரவுகள் தொடர்பாக இந்த அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.