மூன்று இடங்களை மட்டுமே வைத்திருந்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஆதரவுடன் பேருவளை நகர சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி (NPP) பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் ஆறு ஆசனங்களை பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி, இன்றைய வாக்கெடுப்பின் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
அதே நேரத்தில் ஏழு இடங்களைக் கொண்ட ஒரு சுயாதீன குழு கட்டுப்பாட்டைக் கோரத் தவறிவிட்டது. அதற்கு ஈடாக, ஐக்கிய மக்கள் சக்திக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது உள்ளூர் மட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் ஒரு அரிய நிகழ்வை எடுத்துக் காட்டுகின்றது.
இதற்கிடையில், தேசிய மக்கள் சக்தி, இன்று பண்டாரகம பிரதேச சபையின் தலைவர் பதவியையும் வென்றது, உள்ளூராட்சி அமைப்புக்களில் அதன் இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.