மைதானத்தில் மயங்கி விழுந்து கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு!

அவுஸ்திரேலியாவில் நோன்பு கடைபிடித்த பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வெப்பத்தின் தாக்கத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த 40 வயதான  ஜுனைத் ஜாபர் கான் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து அங்குள்ள ஓல்ட் கான்கார்டியன்ஸ் கிளப் அணியில் விளையாடி வந்துள்ளார். இவர் கடந்த மார்ச் 15ஆம் திகதி அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரியில் நடந்த ஓல்ட் கான்கார்டியன்ஸ் ஏள பிரின்ஸ் ஆல்ஃபிரட் ஓல்ட் அணிகளுக்கிடையே நடந்தபோட்டியில் பங்கேற்றார்.

இதன்போது அவர் வெறும் தண்ணீர் மாத்திரமே குடித்து விளையாடியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  ஜுனைத் ஜாபர் கான் துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீடிரென மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கியும் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

நன்றி

Leave a Reply

error: Content is protected !!