மோடியின் இலங்கைப் பயணம் – இந்திய விசேட பாதுகாப்புக் குழு கொழு்பில் தரையிறங்கியது!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்புக் குழுவொன்று கொழும்பை சென்றடைந்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்திற்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் நோக்கில் இந்தியாவிலிருந்து விசேட பாதுகாப்பு குழுவொன்று கொழும்பை சென்றடைந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி எதிர்வரும் 4ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மோடியின் பயணத்தின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 04ஆம் திகதி மாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் மோடி வந்திறங்கவுள்ளதுடன் எதிர்வரும் 6ஆம் திகதி நாடு திரும்பும் வரை கொழும்பு உட்பட பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!