யாழில். 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுமார் 100 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30.03.23) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் வீதியில் சென்ற பாரவூர்தி ஒன்றினை பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து மறித்து சோதனையிட்ட போதே கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன.

வாகனத்தினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 45 பொதிகள் மீட்கப்பட்டன எனவும், அவற்றின் நிறை சுமார் 100 கிலோ எனவும், அவற்றினை கடத்தி சென்ற குற்றச்சாட்டில் வாகனத்தில் பயணித்த மூவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸ் விசேட அதிரடி படையினர் , மீட்கப்பட்ட கஞ்சா , கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பவற்றை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

முருங்கனில் 11 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் ஒருவர் கைது.

மன்னாரில் இருந்து கொழும்பிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி பீடி இலை மூட்டைகளுடன் நேற்று முன்தினம்  சனிக்கிழமை (29) இரவு முருங்கன் பகுதியில் வைத்து முருங்கன் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கொண்டு வரப்பட்டு பின்னர் கொழும்பு கொண்டு செல்லப்பட்ட போது முருங்கன் பகுதியில் வைத்து குறித்த பீடி இலை மூடைகள் மீட்கப்பட்டதுடன்,சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

மன்னார் இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முருங்கன் பகுதியில் வைத்து குறித்த வாகனம் சோதனையிடப்பட்டன.

இதன் போது 40 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 11 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 1200 கிலோ கிராம் பீடி இலை மூடைகள் மீட்கப்பட்டதுடன், களனியைச் சேர்ந்த 23 வயதுடைய குறித்த வாகனத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு முருங்கன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

முருங்கன் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

The post யாழில். 100 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!