யோக்கட் எடுத்து சென்றவருக்கு 30 ஆயிரம் – புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு 10 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் உரிய வெப்ப நிலையை பேணாது யோக்கட்களை வாகனத்தில் எடுத்து சென்ற சாரதிக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்று 30ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன்,  கைப்பெற்றப்பட்ட யோக்கட்களையும் அழிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

யோக்கட்களை 06 செல்சியஸ் வெப்ப நிலையில் கூலர் வாகனத்தில் எடுத்து செல்ல வேண்டிய நிலையில் அதன் வெப்ப நிலையை அதிகரித்து 18 செல்சியஸ் வெப்ப நிலையில் கடைகளுக்கு விநியோகிக்க கொண்டு சென்ற வாகன சாரதிக்கு எதிராக அராலி பொது சுகாதார பரிசோதகர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து சாரதியை கடுமையாக எச்சரித்த மன்று 30 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிட்டதுடன் , கைப்பற்றப்பட்ட யோக்கட்கப்கள் அடங்கிய 200 பக்கெட்களையும்  அழிக்குமாறும் உத்தரவிட்டது

இதேவேளை கைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட மீன் வியாபாரிக்கு,  மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.மானிப்பாய் சந்தை பகுதியில் புகைப்பிடித்தவாறு மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரிக்கு எதிராக மானிப்பாய் பொது சுகாதார பரிசோதகர் கி. அஜந்தன் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, மன்றில் முன்னிலையாகி இருந்த மீன் வியாபாரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, வியாபாரியை கடுமையாக எச்சரித்த மன்று 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!