பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் நிலைய அதிபர்கள் தொடங்கிய அடையாள வேலைநிறுத்தம் நேற்று (17) நள்ளிரவில் முடிவுக்கு வந்தது.
அதன்படி, ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, இன்று முதல் ரயில் சேவைகள் வழக்கம் போல் தொடங்கும் என்று தெரிவித்தார்.
பல தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, மே 16 நள்ளிரவில் ரயில் நிலைய அதிபர்கள் 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.
வேலைநிறுத்தத்தின் விளைவாக, நாளாந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதுடன், இரவு அஞ்சல் ரயில் சேவைகள், நேற்றும் அதற்கு முந்தைய நாளும் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், கோரிக்கைகள் தீர்க்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்றும் சோமரத்ன எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW