0
வார்சா: போலந்து நாட்டில் உள்ள ரஷ்யாவின் தூதரகத்தை மூடுவதற்கு அந்நாடு உத்தரவிட்டுள்ளது.
போலந்து நாட்டில் கடந்த ஆண்டு வார்சாவில் உள்ள 1400 கடைகள் மற்றும் சேவை மையங்களை கொண்ட ஒரு வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்துக்கு ரஷ்யா தான் காரணம் என்று போலந்து அதிகாரிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலந்தின் கிராகோ நகரில் உள்ள ரஷ்ய துணை தூதரகத்தை மூடுமாறு வெளியுறவு துறை அமைச்சர் ராடெக் சிகோர்சி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேரிவில்ஸ்கா தெருவில் உள்ள வணிக வளாகத்துக்கு எதிராக ரஷ்யா சிறப்பு சேவைகள் நாசவேலையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. எனவே கிராகோவில் உள்ள ரஷ்ய கூட்டமைப்பின் துணை தூதரகம் செயல்படுவதற்காக அளிக்கப்பட்ட ஒப்புதலை திரும்ப பெற முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று தாக்குதலை நடத்தும் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா கடந்த காலங்களில் மறுத்துள்ளது.