ராஜிதவின் முன்பிணை  மனு நிராகாிப்பு – Global Tamil News

 

முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின்  முன்பிணை  கோாி விண்ணப்பித்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சர்ச்சைக்குரிய மணல் சுரங்க ஒப்பந்தம் தொடர்பாக லஞ்சம் அல்லது ஊழல்   குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் தாம் கைது செய்யப்படுவதைத் தடுக்கக் கோரி ராஜித  இந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தாா்.

தொலைபேசியை துண்டித்து, வீட்டை காலி செய்து, பல முறை  அழைப்பாணைகளை  புறக்கணித்து, ராஜித சேனாரத்ன தன்னைக்  கைது செய்வதைத் தவிர்த்து வந்ததாக ஆணைக்குழுவால் நீதிமன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply