ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் பாவனைக்காக ரூ. 5.7 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
இந்த செலவு பத்து ஆண்டுகளுக்கானது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 2012 முதல் 2022 வரையான பத்து ஆண்டுகளில் மூன்று ஜனாதிபதிகளின் கீழ் இந்த செலவுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை 2012-2022 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது, அந்த காலத்தில் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் பதவியில் இருந்துள்ளனர்.