“மும்மொழிக் கொள்கையை மக்கள் மத்தியில் வலியத் திணிப்பது, மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்கும் செயற்பாடு என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ”விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும்” என தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் வைத்தியர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மும்மொழிக் கொள்கை தொடர்பாக விஜய் தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போதே தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது விஜயின் திரைப்படங்கள் பல மொழிகளில் திரையிடப்படலாம், ஆனால் கற்றல் செயற்பாட்டிற்கு மாத்திரம் பல மொழிகள் வேண்டாம் எனக் கூறுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மை காணப்படுவதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.