விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 10 லட்சம் இழப்பீடு

கொத்மலை – கெரண்டிஎல்ல பஸ் விபத்தில் உயிரிழந்த நபரொருவருக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதனடிப்படையில், உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு இந்த பணத்தை உடனடியாக வழங்க ஜனாதிபதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதவிர, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் காப்புறுதி நிதியத்தின் மூலம் இழப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!