விம்பிள்டன் அரையிறுதியில் ஜோகோவிச் – சின்னர் இன்று மோதல்!

லண்டன், சென்டர் கோர்ட்டில் வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்சும் ஜானிக் சின்னரும் சந்திக்க உள்ளனர்.

அதிக விம்பிள்டன் பட்டங்களை வென்ற ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்ய ஜோகோவிச் இலக்கு வைத்துள்ளார்.

அதேநேரத்தில், சின்னர் இங்கிலாந்தில் தனது முதல் இறுதிப் போட்டியை எட்ட விரும்புகிறார்.

2017 முதல் தொடர்ச்சியாக ஆறு சீசன்களில் விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் ஜோகோவிச் பங்கேற்று வருகிறார்.

இருப்பினும், அண்மைய போட்டிகளில் சின்னர் ஒரு கடினமான போட்டியாளராக உருவெடுத்துள்ளார்.

38 வயதான ஜோகோவிச், 2023 ATP இறுதிப் போட்டிக்குப் பின்னர் சின்னரை வீழ்த்தவில்லை.

இத்தாலிய வீரர் சின்னர் இறுதி நான்கு போட்டிகளில் வென்றார்.

2023 மற்றும் 2024 ஆகிய இரண்டிலும் ஜோகோவிச் தோல்வியடைந்தார்.

Image

ஐந்து முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான கார்லோஸ் அல்கராஸிடம் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தார்.

ஏழு முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற ஜோகோவிச், தற்சமயம் 25 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சியில் உறுதியாக உள்ளார்.

எனினும், விம்பிள்டன் காலியதியில் இத்தாலியின் ஃபிளேவியோ கோபோலிக்கு எதிரான போட்டியின் இறுதிக்கட்டத்தில் வழுக்கி விழுந்ததால் ஏற்பட்ட சிறிய காயம் காரணமாக ஜோகோவிச் தற்போது அவதிப்பட்டு வருகிறார்.

 

மூன்று மணி நேரம் 11 நிமிடங்களில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-7 (6-8), 6-2, 7-5, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

மறுபுறம் அமெரிக்க பென் ஷெல்டனை 7-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் காலிறுதியில் தோற்கடித்த சின்னர், ஜோகோவிச் எதிர்த்து ஆடும் போட்டியிடும் ஒரு வலிமையான எதிரியாகவே பரவலாக பார்க்கப்படுகிறார்.

நன்றி

Leave a Reply