வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று (16) காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (16) அதிகாலை 4:40 மணியளவில் உடுகாவாவில் உள்ள ஒரு சட்டத்தரணியின் வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
எனினும், இந்த துப்பாக்கிச் சூட்டினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
பொலிஸாரின் விசாரணையின் படி, குறித்த சட்டத்தரணிக்கு முன்னதாகவே கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.