ஷிராந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்தவின் விளக்கமறில் நீடிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றில் இன்று (02.07.25)  முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க தலைமை நீதிபதி தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தனது பதவி காலத்தில் விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நிஷாந்த விக்ரமசிங்க, இலங்கை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, நிஷாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

The post ஷிராந்தி ராஜபக்சவின் சகோதரர் நிஷாந்தவின் விளக்கமறில் நீடிப்பு! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!