தனக்குச் சொந்தமான செயற்கைக்கோள் இணைய சேவையான ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைப்பதாக பில்லியனர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ள அவர்,
Starlink now available in Sri Lanka! (ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது!) என்று கூறியுள்ளார்.
இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை அனுமதிக்கும் திருத்தத்தைத் தொடர்ந்து, 2024 ஆகஸ்ட் மாதம் ஸ்டார்லிங்க் ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றது.
கடந்த வாரம், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்னே, ஸ்டார்லிங்க் குறித்த ஒரு முன்னோடித் திட்டம் ஏற்கனவே நடைபெற்று வருவதாகக் கூறினார்.
எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை வழங்கி வருகிறது.
இது தற்போது கிட்டத்தட்ட 100 நாடுகளில் செயல்பாட்டில் உள்ளது.
செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை அளிக்கப்படுவதால், இந்த இணைய சேவை நகரம், கிராமம் என பாகுபாடு இன்றி அனைத்து பகுதிகளுக்கும் ஒரே சீரான வேகத்தில் கிடைக்கும்.