வரலாற்று ஏடுகள் சொல்வது போல, இஸ்லாமிய ஸபென் வீழ்ச்சியோடு அரேபியர்கள் ஸ்பெயின் தேசத்தை மாத்திரம் இழக்கவில்லை.
மாறாக, அவர்கள் அமெரிக்க , ஆஸ்திரேலியா கண்டங்கள், நியூசிலாந்து, மற்றும் ஆயிரக்கணக்கான தீவுகளையும் சேர்த்தே இழந்தனர். மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச வர்த்தக பாதைகளுடன் கூடிய பெரும் கடல் மார்க்கங்களையும் சேர்த்தே இழந்தனர்.
நாகரீகத்தில் பின்தங்கியிருந்த ஐரோப்பிய விவசாயிகள், அரேபிய குதிரைகளுடனும் அவர்கள் வகுத்து வைத்திருந்த நுட்பமான வரைபடங்களுடனும் ஸ்பானிய பீரங்கிகள் சகிதம் புதியதோர் உலகம் நோக்கி ஜிப்ரால்டர் நீரிணையூடாக படையெடுத்து செல்வதை ஓரமாக நின்று அவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டியிருந்தனர்.
16 ஆம் நூற்றாண்டில் ஹெர்னான் கோர்டெஸ் என்பவரின் தலைமையில் சென்ற ஸ்பானிய குதிரைப்படைகள் மெக்சிகோவில் தரையிறங்கியபோது, அங்கிருந்த அமெரிக்க பூர்வ குடிகளான செவ்விந்திர்கள் மற்றும் இன்கா இனத்தின் பேரரசையும் நிலைகுலை வைத்ததெல்லாம் ஸ்பானிய வீரர்களை விட அரேபிய குதிரைகள்தான்.
அதாவது அரேபிய வீரர்கள் அற்ற அரேபிய குதிரைகள் அமெரிக்க கண்டத்தை நோக்கி அமைதியாக படையெடுத்தன என்று வரலாற்று நூல்களில் எழுதி வைக்க வேண்டும்.
✍ தமிழாக்கம் / imran farook