ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 47 ரன்கள் அடித்தார். லக்னோ அணி தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 191 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் நிகோலஸ் பூரன் – மிச்சேல் மார்ஷ் ஆகியோர் கூட்டணி அமைத்து அதிரடி காட்டினர். 

26 பந்துகளில் நிக்கோலஸ், 6 சிக்சர், 6 பவுண்டரிகள் என 70 ரன்களை அடித்து விளாசினர். அதேபோல் மிச்சேல் மார்ஷும் 52 ரன்கள் குவித்தார். 

தொடர்ந்து 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு லக்னோ அணி 193 ரன்கள் அடித்தது. இதன் மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றியைக் கைப்பற்றியது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள

News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!

JOIN NOW


🎧 Listen Live on Aha FM – Your Favorite Online Tamil Radio!

நன்றி

Leave a Reply

error: Content is protected !!