ஹைலன்ட் யோகட் மற்றும் பசும்பாலின் விலை குறைவடைந்துள்ளது. யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 70 ரூபாவாகும்.
450 மில்லி லீற்றர் பதப்படுத்தப்பட்ட பசும்பாலின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 200 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 900 மில்லி லீற்றர் பதப்படுத்தப்பட்ட பசும்பாலின் விலை 60 ரூபாவால் குறைவடைந்துள்ளது.
அதன் புதிய விலை 380 ரூபாவாகும். 450 மில்லி லீற்றர் 3 நாட்கள் வைத்திருக்கக்கூடிய பசும்பால் பெக்கட்டின் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.