114 மேலதிக வாக்குகளால் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றம்


2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

114 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்படி,  ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம்  17 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதங்கள் சபையில் இடம்பெற்று வந்த நிலையில், இன்றையதினம் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு சபையில் நடைபெற்றது.

வரவு செலவுத் திட்ட விவாதத்தின் இறுதி நாளான இன்று(21) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் சபையில் முன்னிலையாகி உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!