பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பு ஒரே இரவில் 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது.
இவற்றுள் ஒன்று கிழக்கு நகரமான லாகூருக்கு அருகிலுள்ள ஒரு இராணுவ இலக்கைத் தாக்கியது.
இதனால் வீரர்கள் இழப்புக்களை சந்தித்ததாகவும், காயமடைந்ததாகவும் பாகிஸ்தானிய அதிகாரிகள் வியாழக்கிழமை (08)தெரிவித்தனர்.
ஒரு நாள் முன்பு பாகிஸ்தான் இடங்களில் இந்திய ஏவுகணைத் தாக்குதல்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 31 பொது மக்கள் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
இதற்கிடையில், சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியில் இரு நாடுகளின் அதிக இராணுவமயமாக்கப்பட்ட எல்லைக்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்களை இந்தியா வெளியேற்றியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் ஏப்ரல் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் 26 பேரைக் கொன்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
அவர்களில் பெரும்பாலோர் இந்திய இந்து சுற்றுலாப் பயணிகள்.
தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது, ஆனால் இஸ்லாமாபாத் அதை மறுத்துள்ளது.
பாகிஸ்தானில் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் கூறுகையில்,
இந்திய ஆளில்லா விமானம் லாகூர் அருகே இரவு முழுவதும் நான்கு வீரர்களைக் காயப்படுத்தியது மற்றும் ஒரு இராணுவ இலக்கை ஓரளவு சேதப்படுத்தியது.
அதே நேரத்தில் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பு பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் வான்வெளிக்குள் நுழைந்த 12 இந்திய ஆளில்லா விமானங்களை இடைமறித்து சுட்டு வீழ்த்தியது.
தாக்குதல் குறித்து அவர் மேலும் எந்த விவரங்களையும் வெளியிடவில்லை.
தெற்கு சிந்து மாகாணத்தில், மக்கள் வசிக்கும் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களின் இடிபாடுகள் விழுந்ததில் ஒரு குடிமகன் உயிரிழந்தார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்று அவர் மேலும் கூறினார்.
இந்திய அதிகாரிகள் இது குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
லாகூரில், இந்திய எல்லையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் உள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு விமானநிலையமான வால்டன் விமான நிலையம் அருகே ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய காவல்துறை அதிகாரி மொஹமட் ரிஸ்வான் தெரிவித்தார்.
இந்த விமானநிலையத்தில் இராணுவ நிலைகளும் உள்ளன.
பஞ்சாப் மாகாணத்தின் பிற நகரங்களிலும் இரண்டு கூடுதல் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் தலைநகரம் லாகூர் ஆகும்.
பஞ்சாபின் சக்வால் மாவட்டத்தில், விவசாய நிலத்திற்குள் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இதனால், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
மாவட்ட காவல்துறைத் தலைவர் குலாம் மொஹியுதீன் அது யாருடைய ட்ரோன் என்று கூறவில்லை.
அதிகாரிகள் ட்ரோனின் தோற்றம் மற்றும் நோக்கம் குறித்து விசாரித்து வருகின்றனர்.