இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து மகளிர் அணியானது 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நியூஸிலாந்து மகளிர் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி:20 தொடரை 1:1 என்ற கணக்கில் சமப்படுத்தியது.
கிறிஸ்ட்சர்ச்சில் இன்று (16) காலை நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 113 ஓட்டங்களை எடுத்தது.
114 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து மகளிர் அணியானது 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.
இரு அணிகளுக்கும் இடையிலான டி:20 தொடரின் மூன்றாவதும், தீர்க்கமானதுமான போட்டி செவ்வாய்க்கிழமை (18) டுனெடினில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.