தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு வரும் அவுஸ்திரேலிய முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித், கிரெனடாவில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
2025 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் போது விரலில் ஏற்பட்ட காயத்தால் கரீபியன் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் 36 வயதான வீரர் பங்கெடுக்கவில்லை.
அண்மையில் அவரது விரலில் போடப்பட்ட தையல்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று ஸ்மித் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை கரீபியனில் தனது அணியினருடன் இணைந்த இந்த சிரேஷ்ட வீரர், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடக்க டெஸ்டில் 159 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற அணிக்குத் திரும்பும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 01) முழு பயிற்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.