2024-25 சீசனுக்கான முன்னணி ஆடவர் அணிக்கான வருடாந்திர மத்திய ஒப்பந்தங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) இன்று (21) அறிவித்தது.
அதில், கடந்த ஆண்டு உள்வாங்கப்படாமல் இருந்த ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
அதேநேரம், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 2024 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்ற போதிலும், A-பிளஸ் தரவரிசையில் தங்கள் இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர்.
2024 ஒக்டோபர் 1, முதல் 2025 செப்டம்பர் 30 வரையிலான ஆட்டக் காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, 2024-25 சீசனுக்கான வருடாந்திர தக்கவைப்பு இடங்கள் மொத்தம் 34 வீரர்களுக்கு வழங்கப்பட்டது.