2025 IPL; லக்னோவை வீழ்த்தி டெல்லி த்ரில் வெற்றி! – Athavan News

விசாகப்பட்டினத்தில் நேற்று (24) நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு முக்கியமான வெற்றியைப் பெற்றது.

நேற்றிரவு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ளத் தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ அணியானது நிக்கோலஸ் பூரன் மற்றும் மிட்ச் மார்ஷ் ஆகியோரின் அரைசதங்களால் 8 விக்கெட் இழப்புக்கு 209 ஓட்டங்களை எடுத்தது.

மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 76 ஓட்டங்களையும், நிகோலஷ் பூரன் 30 பந்துகளில் 75 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் டெல்லி அணிக்காக மிட்செல் ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

210 ஓட்டம் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 65/5 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில், விப்ராஜ் நிகம் 15 பந்துகளில் 39 ஓட்டங்களை எடுத்து அசத்தலான திருப்பத்தை ஏற்படுத்தினார்.

அசுதோஷ் சர்மாவுடன் இணைந்து 55 ஓட்டங்கள் கூட்டணி அமைத்து, அதிரடியான ஆட்டத்தால் டெல்லி அணியின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

முன்னாள் தலைவர் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி அபார வெற்றியைப் பெற்றதால், அவரது பங்களிப்பு இறுதியில் தீர்க்கமானது.

நிகாம் பந்திலும் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தினார்,

லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர் ஐடன் மார்க்ராமை தனது பந்து வீச்சின் ஆரம்பத்திலேயே ஆட்டமிழக்க வைத்தார்.

இரு அணிகளிலிருந்தும் பல அறிமுக வீரர்களைக் கொண்ட இந்தப் போட்டி, நிகாமின் திறமைக்கு ஒரு களமாக அமைந்தது.

எவ்வாறெனினும், இறுதியில் 19.3 ஓவர்களில் டெல்லி அணியானது ஒன்பது விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கினை கடந்தது.

டெல்லி அணி சார்பில் அதிகபடியாக அசுதோஷ் சர்மா 66 ஓட்டங்களை எடுத்ததுடன், போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார்.

Image

நன்றி

Leave a Reply

error: Content is protected !!