2025ஆம் ஆண்டின் முதலரைப்பகுதியில் நடாத்தப்பட்ட முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் முக்கியமாக கண்டறியப்பட்டவைகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
முறைமைசார் இடர்நேர்வு அளவீடானது இலங்கையின் நிதியியல் முறைமையின் உறுதித்தன்மை மீதான சந்தைப் பங்கேற்பாளர்களின் நம்பிக்கையையும் அதில் ஏற்படக்கூடிய இடர்நேர்வுகள் பற்றிய அவர்களின் கருத்துக்களையும் அளவிட்டுக் கொள்வதுடன் அதன் தடங்களைக் கண்காணிக்கிறது.
அளவீட்டின் மாதிரிக் கட்டமைப்பானது உரிமம் பெற்ற வங்கிகள் உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகள் ஒரு சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனி, காப்புறுதி கம்பனிகள் கூறு நம்பிக்கை முகாமைத்துவக் கம்பனிகள் எல்லைக் கடன்வசதி அளிப்பவர்கள் மற்றும் ஒப்புறுதி அளிப்பவர்கள் பங்குத் தரகு கம்பனிகள் உரிமம்பெற்ற நுண்பாக நிதிக்கம்பனிகள் மற்றும் தரமிடல் முகவராண்மைகள் என்பனவற்றை உள்ளடக்குகின்றது.
விசேடமாக, நிதியியல் துறை இடர்நேர்வு முகாமைத்துவத்தில் ஈடுபடுவோருக்கு இத்தகைய கண்டறியப்பட்டவைகள் ஒரு உசாத்துணை மூலமாகப் பயன்படுகின்றது.
முறைமைசார் இடர்நேர்வு அளவீட்டில் கண்டறியப்பட்டவைகள் இலத்திரனியல் வடிவில் கிடைக்கப்பெறுவதுடன் மத்திய வங்கி வலைத்தளத்தின் பின்வரும் இணைப்பினூடாக அதனை அணுக முடியும்.