246 வெற்றியிலக்கை கடந்த சன்ரைசர்ஸ்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் அணிகள் மோதியிருந்தது.

இந்நிலையில், இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்திருந்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 06 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களை பெற்று சன்ரைசர்ஸ் அணிக்கு 246 வெற்றியிலக்காக நிர்ணயித்தது.

இன்னிலையில் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்று வெற்றியை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!