26/11 மும்பை தாக்குதல்; தஹாவூர் ராணாக்கு 18 நாட்கள் தடுப்பு காவல்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தஹாவூர் ராணாவை (Tahawwur Rana) 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் காவலில் வைக்க சிறப்பு டெல்லியின் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 நாட்கள் காவலில் வைக்கக் கோரியதை அடுத்து, சிறப்பு நீதிபதி சந்தர் ஜித் சிங் நேற்று (10) நள்ளிரவு இந்த உத்தரவினை பிறப்பித்தார்.

2008 மும்பை தாக்குதலில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட 64 வயதான ராணா, விசேட விமானம் மூலமாக நேற்று மாலை 6.30 மணியளவில் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.

விமான நிலையத்தை வந்தடைந்த அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைது செய்தனர்.

அமெரிக்காவில் நீண்ட கால சட்ட நடைமுறையைத் தொடர்ந்து அவரது நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இந்தியாவில், ராணா மீது குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!