269 ஓட்டங்கள்; டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மைல்கல்!

பர்மிங்காமில் நேற்றைய (03) தினம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இந்தியத் தலைவர் எடுத்த அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்த ஷுப்மன் கில், வரலாற்று புத்தகங்களில் தனது பெயரைப் பொறித்தார்.

இதன் மூலம் அவர் மூத்த வீரரான விராட் கோலியின் நீண்டகால சாதனையை முறியடித்தார்.

2019 ஆம் ஆண்டு புனேவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலி ஆட்டமிழக்காது 254 ஓட்டங்களை எடுத்து அற்புதமான சாதனையை படைத்திருந்தார்.

எனினும், பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு அற்புதமான இரட்டை சதம் அடித்து கில் அந்த சாதனையை மீண்டும் மாற்றியமைத்தார்.

கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு கில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

நாட்டில் அவரது டெஸ்ட் சராசரி 14.66 ஆக இருந்தது.

மேலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் அவர் நீக்கப்பட்ட பின்னர், அவர் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டது விமர்சகர்களிடையே கேள்விகளை தூண்டியது.

இருப்பினும் நடந்து வரும் இங்கிலாந்துடனான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இளம் தலைவர் உறுதியாக தனது பதிலை அளித்துள்ளார்.

ஹெடிங்லியில் நடந்த முதல் போட்டியில் 147 ஓட்டங்களை எடுத்த பின்னர், எட்ஜ்பாஸ்டனில் கில் ஒரு அற்புதமான இன்னிங்ஸை உருவாக்கி, சவாலான கட்டங்களில் இந்தியாவை நங்கூரமிட்டார்.

அவரைச் சுற்றி விக்கெட்டுகள் விழுந்தாலும், கில் உறுதியாக இருந்தார்.

ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுடன் முக்கியமான இணைப்பாட்டங்களை அமைத்து இந்தியா ஒரு சிறந்த ஓட்ட இலக்கினை எட்டுவதற்கு உதவினார்.

Image

பல சாதனைகள் முறியடிப்பு

கில், துணைக்கண்டத்திற்கு வெளியே அதிக ஓட்டங்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனையை அவர் இப்போது படைத்துள்ளார்.

அதைத் தவிர, இங்கிலாந்தில் ஒரு இந்தியரின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சுனில் கவாஸ்கரின் சாதனையை அவர் முறியடித்தார்.

சுனில் கவாஸ்கர் இந்த சாதனையைப் படைத்தார்.

25 வயதான அவர், கிரேம் ஸ்மித்துக்குப் பின்னர் ஒரு இன்னிங்ஸில் 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது இளைய தலைவர் என்ற பெருமையையும் பெற்றார்.

போட்டி நிலவரம்

இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் இந்திய அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 587 ஓட்டங்களை குவித்தது.

ஷுப்மன் கில் ரவீந்திர ஜடேஜா 89 ஓட்டங்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ஓட்டங்களையும் மற்றும் வொஷிங்டன் சுந்தர் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் டொங் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர், தனது முதலாவது இன்னிங்ஸுக்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களை பெற்றது.

ஜோ ரூட் 18 ஓட்டங்களுடனும், ஹாரி புரூக் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகும்.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!