5.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விலை போன `விண்வீழ்கல்‘

செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று  5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்த ஏலம் சுமார் 15 நிமிடங்கள் நீடித்துள்ளது எனவும், அதில்  நிகழ்நிலை மூலமாக பலர் பங்கேற்றிருந்தனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘NWA 16788’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த  விண்வீழ்கல்லானது 2023ஆம் ஆண்டு சஹாரா பாலைவனத்தில் உள்ள நைஜர் நாட்டின் அகாடெஸ் பகுதியில்  கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன் குறித்த விண்வீழ் செவ்வாய்க் கோளிலிருந்து பிரிந்த மிகப்பெரிய துண்டு என்றும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து Sotheby’s நிறுவனத்தின் துணைத்தலைவர் கெசேண்ட்ரா ஹெட்டன் கருத்துத் தெரிவிக்கையில் ” இந்த அரிய விண்வீழ்கல் கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது எனவும்,  அது பெருங்கடலுக்குப் பதிலாக பாலைவனத்தில் விழுந்தது மிகப் பெரிய அதிசயம் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply