17
பிரபல பெண் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஸ்வஸ்திகா அருளிங்கத்திற்கு எதிரான பாலியல் வன்முறைக் கருத்துகள் குறித்து விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (17/03/2025) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து ஸ்வஸ்திகா அருளிங்கம் பாலியல் வன்முறை தொடர்பான கருத்துகளை எதிர்கொண்டதாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகக் கூறினார்.
மேலும், இந்த விவகாரம் பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் எழுப்பப்பட்டதாகவும், பெண் சட்டத்தரணி மீது நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய தீங்கு விளைவிக்கும் கருத்துகளை வெளியிட்டடிருப்பது நாடாளுமன்றத்திற்கும் தெரியும் என்றும் அவர் கூறினார்.
எனவே, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் ரத்நாயக்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் அண்மையில் நாடாளுமன்றத்தில் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளிங்கத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததைத் தொடர்ந்து விசாரணைக்கான கோரிக்கை எழுந்துள்ளது.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.