நாக்பூரில் வெடித்த வன்முறை!

மகாராஷ்ராவின் , ஔரங்கபாத் நகரில் உள்ளமுகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றுமாறு இந்துத்துவா அமைப்பினர் கோரிக்கை விடுத்த  விவகாரம் பாரிய  பூதாகாரமாக வெடித்துள்ளது நிலையில் நேற்றைய தினம் நாக்பூரில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மகாராஷ்டிர முதல்வரும் பா.ஜ.க தலைவருமான தேவேந்திர பட்னவீஸ், “ஒளரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தமை” பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில்,  ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பவர்களுக்கு 21 லட்சம் இந்திய ரூபாய்  பரிசு வழங்கப்படும் என உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துத்துவா அமைப்பொன்றும்   அறிவித்திருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருறந்து.

இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் என்ற அமைப்பினர் ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட வேளை  நாக்பூரில் பாரிய  வன்முறை வெடித்துள்ளதாகவும், இதன் காரணமாக பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதை அடுத்து வன்முறை தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது அமைதி நிலவுகிறது.

இந்நிலையில் ஔரங்கசீப் கல்லறையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, அதைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பொலிஸார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை ஒளரங்கசீப் கல்லறையை இடிப்பதற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், ‘முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் கொடூரமானவர்தான், மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனை படுகொலை செய்தவர்தான். ஆனால் மராத்தியர்களின் பேரரசை ஒளரங்கசீப்பால் கைப்பற்ற முடியாமல் போனது. ஒளரங்கசீப்பின் கல்லறை நூற்றாண்டுகளாக இருக்கிறது.

அவருடைய தவறான நடவடிக்கைகளை நினைவூட்டக் கூடியதாகவும் இந்த கல்லறையைப் பார்க்கலாம். ஒளரங்கசீப்பை புகழ்ந்து பேசுவது எல்லாம் தேவையற்றது. அதை அகற்றுவது எந்த நோக்கத்திற்கும் உதவாது. இப்பிரச்னையை மீண்டும் கிளப்ப வேண்டிய அவசியமில்லை’ என தெரிவித்துள்ளார்.

இதேவேளை மத்திய அமைச்சரும் நாக்பூர் எம்பியும் நிதின் கட்கரி, ‘தவறு செய்தவர்கள் அல்லது சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நான் உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.

இந்த நிலைமை குறித்து முதலமைச்சருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி


Discover more from SARINIGAR

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

error: Content is protected !!