தான் கைது செய்யப்படுவதை தவிர்க்கும் நோக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தாக்கல் செய்த ரிட் மனு மீதான தீர்ப்பு, இன்று (17) அறிவிக்கப்படவுள்ளது.
தன்னை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
2023ஆம் ஆண்டு வெலிகம பகுதியில் ஹோட்டலுக்கு முன்னால் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக, தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட எட்டு பேரைக் கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம், கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. பின்னர், கடந்த 11 ஆம் திகதி திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
எனினும், குற்றப் புலனாய்வுத் துறையினரால் தேசபந்து தென்னகோனை இதுவரை கைது செய்ய முடியவில்லை.
தற்போதும், தேசபந்து தென்னகோனை தேடும் பணிக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று (16) தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Discover more from SARINIGAR
Subscribe to get the latest posts sent to your email.