ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமனம் | RBI Appoints Indranil Bhattacharyya as New Executive Director

ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் மார்ச் 19-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இவர் பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையை கவனித்துக் கொள்வார். இந்த பதவியில் நியமிக்கப்படுவதற்கு முன்பு அவர் பணக்கொள்கை துறையின் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.

ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை, நிதிக் கொள்கை, வங்கியியல் மற்றும் சர்வதேச பொருளாதார உறவுகள் உள்ளிட்ட துறைகளில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

மேலும் கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலத்தில் கத்தாரின் தோஹா நகரில் உள்ள கத்தார் மத்திய வங்கி ஆளுநரின் தொழில்நுட்ப அலுவலகத்தில் பொருளாதார நிபுரணராகவும் பணியாற்றி உள்ளார்.

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!