அண்மையில் இடம்பெற்ற பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து மிர்பூரிலுள்ள பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைமையகத்தில் ஊழல் தடுப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இது தொடர்பிலான விசாரணைக்கு ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு உதவும் வகையில் கிரிக்கட் சபையினால் 3 பேர் கொண்ட சுயாதீன விசாரணை குழுவும் அமைக்கப்பட்டது. 2013ம் ஆண்டுக்கு பின்னர் பி.பி.எல் ஊழல் தொடர்பாக முறையான விசாரணை ஒன்று இடம்பெறும் முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.
தொடரில் விளையாடிய 8 உள்ளுர் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் மீது ஆட்ட நிர்ணய சதி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.