‘CMF போன் 2 புரோ’ இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் | cmf phone 2 pro smartphone launched in india price features

சென்னை: இந்தியாவில் ‘CMF போன் 2 புரோ’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது நத்திங் நிறுவனம். முதல் முறையாக இந்த போனுடன் சார்ஜரையும் வழங்குகிறது நத்திங். இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது நத்திங் நிறுவனம். தொழில்நுட்ப சாதன உற்பத்தி நிறுவனமான நத்திங், ஹெட்செட் விற்பனை மூலம் சந்தையில் களம் கண்டது. தொடர்ந்து ஸ்மார்ட்போன் விற்பனையை 2022-ம் ஆண்டில் தொடங்கியது. இது ஸ்மார்ட்போன் ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் இந்நிறுவனத்தின் நிறுவனரும், சிஇஓ-வுமான கார்ல் பெய் (Carl Pei). இவர் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராக செயல்பட்டவர். பின்னர் கடந்த 2021-இல் நத்திங் நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த சூழலில் மலிவு விலையிலான போனை சந்தையில் அறிமுகம் செய்யும் நோக்கில் ‘CMF’ என்ற துணை நிறுவனத்தை நத்திங் நிறுவனம் 2023-ல் தொடங்கியது. இந்த பிராண்டின் கீழ் கடந்த ஆண்டு ‘CMF போன் 1’-னை அறிமுகம் செய்தது நத்திங். தற்போது இந்தியாவில் CMF போன் 2 புரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. ‘CMF போன் 2 புரோ’ சிறப்பு அம்சங்கள்:

  • 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 புரோ ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 15 இயங்குதளம்
  • 5,000mAh பேட்டரி
  • 33 வாட்ஸ் சார்ஜர் போனுடன் கிடைக்கிறது
  • 5 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்டும் உள்ளது
  • 50+50+8 மெகாபிக்சல் என மூன்று கேமராக்கள் இதில் இடம்பெற்றுள்ளது
  • 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
  • 4 வண்ணங்களில் இந்த போன் கிடைக்கிறது
  • வரும் மே 5-ம் தேதி முதல் போனின் விற்பனை தொடங்குகிறது
  • இதன் விலை ரூ.18,999 முதல் ஆரம்பமாகிறது

நன்றி

Leave a Reply

error: Content is protected !!