2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (01) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியானது மும்பை இந்தியன் (MI) அணியுடன் மோதுகின்றது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 50 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு ஜெய்ப்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஆரம்பமாகும்.
RR அணி, 10 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிகள் தரவரிசையலி எட்டாவது இடத்தில் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டிக்குப் பின்னர், RR அணியானது 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷியின் அற்புதமான இன்னிங்ஸைக் கண்டு உற்சாகமாக உள்ளது.
இந்த டீனேஜ் வீரர் 35 பந்துகளில் 100 ஓட்டங்களை எடுத்து சர்வதேச கவனத்தையும் ஈர்த்தார்.
இன்றைய ஆட்டத்தில் அவர் மீது அதிகம் கவனம் செலுத்தப்படும்.
அதேநேரம், ஹார்டிக் பாண்ட்யா தலைமையிலான MI, இந்தப் போட்டியில் அற்புதமான மீள் வருகையைப் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் தங்கள் ஃபார்மில் தடுமாறி வந்தாலும், போட்டியின் இறுதிக் கட்டத்தில் முதல் நான்கு அணிகளில் ஒன்றாக உள்ளது.
அவர்கள் தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2 ஆவது இடத்தைப் பிடித்தனர்.
தற்போது, 10 போட்டிகளில் 6 வெற்றிகளுடன், மும்பை இந்தியன்ஸ் 3 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தப் போட்டியில் மும்பை வெற்றி பெற்றால், பஞ்சாப் கிங்ஸை பின்னுக்குத் தள்ளி மீண்டும் 2 ஆவது இடத்தை பிடிப்பார்கள்.
RR அணியை பொறுத்தவரை, இந்தப் போட்டியில் தோற்றால் அவர்கள் தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகும்.
ஐ.பி.எல். அரங்கில் இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் MI அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
RR அணியானது 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்தது.
கடந்த ஆண்டு RR, மும்பை அணியுடன் இரண்டு முறை விளையாடி, இரண்டு போட்டிகளிலும் முறையே 6 விக்கெட்டுகள் மற்றும் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.