மும்பையில் உள்ள புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற 2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த வெற்றியானது நடப்பு சீசனில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான அணி பெற்றுக் கொண்ட மூன்றாவது வெற்றியாகும்.
இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 6 புள்ளிகளை மும்பை இந்தியன் அணி பெற்றது.
இதனால், தொடர்ச்சியான வெற்றிகளுடன் பிளேஆஃப் சுற்றுக்கான அவர்களின் நம்பிக்கை உயிர்ப்புடன் உள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பாட்டம் செய்ய களமிறங்கிய SRH அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட்ஸ் இந்த முறை தங்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளிக்கத் தவறிவிட்டனர்.
இருவரும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றாலும், அபிஷேக் சில பவுண்டரிகளை அடித்தார், பவர்பிளேயில் SRH 43 ஓட்டங்களை எடுக்க உதவினார்.
பின்னர், அபிஷேக் 28 பந்துகளில் 40 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷான் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 28 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கிளாசன் களமிறங்கிய துடுப்பெடுத்தாட SRH அணியானது 200 ஓட்டங்களுக்கு அருகில் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜஸ்பிரித் பும்ராவின் ஒரு அற்புதமான யோர்க்கரின் உதவியுடன் கிளாசன் 28 பந்துகளில் 37 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் SRH அணியானது 5 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
பந்து வீச்சில் வில் ஜாக்ஸ் ஒரு நல்ல பங்களிப்பினை மும்பை அணிக்காக வழங்கினார்.
மூன்று ஓவர்களுக்குப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர் 14 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
163 ஓட்ட ஓட்ட எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முன்னாள் தலைவர் ரோஹித் சர்மா 160 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் துடுப்பாட்டம் செய்தமையினால் நல்ல தொடக்கம் கிடைத்தது.
எனினும், அவரால் 16 பந்துகளில் 26 ஓட்டங்களை மாத்திரம் பெற முடிந்தது.
வில் ஜாக்ஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையேயான 52 ஓட்ட கூட்டணிதான் துடுப்பாட்ட வீரர்களுக்கு போட்டியில் மிகவும் தேவையான உத்வேகத்தை அளித்தது.
சூர்யாகுமார் யாதவ் 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறியபோது, மும்பை அணியை இறுதிக் கோட்டுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை மீண்டும் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
சீரான இடைவெளியில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணிக்கு, அவர்களின் 34 ஓட்டங்கள் கூட்டணி இன்றியமையாததாக அமைந்தது.
இறுதியாக மும்பை 18.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.
அதேநேரம் பேட் கம்மின்ஸின் 3 விக்கெட்டுகள் வீணாகி, SRH அணி மீண்டும் ஒரு தோல்வியை சந்தித்தது.