10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடரானது நேற்றைய தினம் கொல்கத்தாவில் கோலாகலமாக ஆரம்பமானது.
இதன் ஆரம்பப் போட்டியில் நடப்பு சம்பியனான கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றியைப் பதிவு செய்தது.
இந்நிலையில் இன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அத்துடன் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.