IPL 2025; குஜராத் – லக்னோ இடையிலான போட்டி இன்று! – Athavan News

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (22) நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 64 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகும்.

லீக் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையிலுள்ள ஷுப்மான் கில்லின் GT அணி ஏற்கனவே பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியின் மூலம் GT அணி பிளேஆஃப்க்கான தங்கள் தகுதியை உறுதிப்படுத்தியது.

இதற்கு நேர்மாறாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் அண்மையில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, LSG அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

தொடரில் ஐந்து வெற்றிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கும் ரிஷப் பந்த் தலைமையிலான அணி, பெருமையை மீட்டெடுத்து, தங்கள் சீசனை வலுவான நிலையில் முடிக்க இந்தப் போட்டியில் முயற்சிக்கும்.

இந்த நிலையில் இந்தப் போட்டி ஒரு அற்புதமான மோதலாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது.

ஐ.பி.எல். அரங்கில் இரு அணிகளும் இதுவரை ஆறு போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் GT அணியானது 4 போட்டிகளிலும், GT அணியானது 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!