2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இன்று (3) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனின் 15 அவது போட்டியானது கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் இன்று இரவு 7:30 மணிக்கு ஆரம்பமாகும்.
2024 ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியாளர்கள் இந்த சீசனில் சிறப்பான தொடக்கத்தை பெறவில்லை.
SRH புள்ளிகள் பட்டியலில் 8 ஆவது இடத்தில் உள்ளது.
அதேநேரம், KKR அணி இறுதி இடத்தில் உள்ளது.
இருவரும் தங்கள் முதல் 3 போட்டிகளில் இரண்டில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.
எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளும் மீண்டும் வேகத்தை அடைய ஆர்வமாக உள்ளன.
SRH அணி மூன்று போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கலவையான தொடக்கத்தைக் கொண்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான தொடக்க வெற்றி இருந்தபோதிலும், தொடர்ச்சியான தோல்விகள் அவர்களின் நிகர ஓட்ட விகிதத்தைப் பாதித்துள்ளன.
மீண்டு எழும்பத் தீர்மானித்த அணி, வலுவான செயல்திறனை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
இதேபோல், KKR அணியும் நடப்பு சீசனில் ஒரு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான அவர்களின் ஏமாற்றமளிக்கும் ஆட்டம், வரவிருக்கும் போட்டிகளில் முன்னேறி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த உந்துதலாக அமையும்.
இதுவரையான ஐ.பி.எல். வரலாற்றில் KKR மற்றும் SRH அணிகள் மொத்தம் 28 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 வெற்றிகளைப் பெற்றுள்ளது.