2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (20) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியை எதிர்கொள்கிறது.
நடப்பு ஐ.பி.எல். சீசனின் 62 ஆவது போட்டியானது இன்றிரவு 07.30 மணிக்கு புது டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஆரம்பமாகும்.
புள்ளிகள் பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையிலான போட்டி இது.
தோனி தலைமையிலான CSK அணி 12 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 10 ஆவது இடத்தில் உள்ளது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான RR அணி புள்ளிகள் பட்டியலில் 9 அவது இடத்தில் உள்ளது.
13 போட்டிகளில் 3 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் CSK அணி 16 போட்டிகளிலும், RR அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.