IPL 2025; பஞ்சாப்பை 50 ஓட்டத்தால் வீழ்த்திய ராஜஸ்தான்!

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்று மாலை நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.

இந்த வெற்றியானது நடப்பு ஐ.பி.எல்.தொடரில் சஞ்சு சாம்ஸன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி பெற்றுக் கொள்ளும் இரண்டாவது வெற்றியாகும்.

அதேநேரம், தொடரில் இதுவரை மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியின் முதல் தோல்வியாகவும் அமைந்தது.

சண்டிகரில் நேற்று இரவு 07.30 மணிக்கு ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல். தொடரின் 18 ஆவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 67 ஓட்டங்களையும், சஞ்சு சாம்சன் 38 ஓட்டங்களையும் மற்றும் ரியான் பராக் 43 ஓட்டங்களையும் அணி சார்பில் அதிகளவாக எடுத்தனர்.

பின்னர் 206 ஓட்டம் என்ற இலக்கினை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் நேஹல் வதேரா மாத்திரம் அதிகபடியாக 41 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா மற்றும் மகேஷ் தீக்ஷன ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் அதிகளாவக கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவானார்.

இதேவேளை, நேற்று மாலை சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது 25 ஓட்டங்களினால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.

தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சந்திக்கும் தொடர்ச்சியான மூன்றாவது தோல்வியாக இது அமைந்ததுடன், டெல்லி கேபிட்டல்ஸின் மூன்றாவது வெற்றியாகவும் இது அமைந்தது.

இந்த வெற்றியுடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!