2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (28) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR)அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 47 ஆவது போட்டியானது ஜெய்ப்பூரில் அமைந்துள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்த சீசனில் வெற்றிகளைப் பெற போராடி வரும் ரியான் பராக் தலைமையிலான RR அணியானது, இந்தப் போட்டியில் மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மறுபுறம், இந்த சீசனில் தடுக்க முடியாத நிலையில் இருக்கும் ஷுப்மான் கில்லின் GT அணியானது, இன்னும் இரண்டு புள்ளிகளைப் பெற்று முதல் நான்கு இடங்களில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்த விரும்புகிறது.
ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
அதில் GT அணியானது ஆறு வெற்றிகளையும், RR அணியானது ஒரு வெற்றியையும் பதிவு செய்துள்ளன.