2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (30) நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியானது பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியுடன் மோதவுள்ளது.
நடப்பு ஐ.பி.எல். தொடரின் 49 ஆவது போட்டியானது சென்னை, சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இந்தப் போட்டியில் CSK அணியானது வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஒன்பது ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளதால், CSK இன் பிளேஆஃப் சுற்றுக்கான நம்பிக்கைகள் ஒரு நூலில் தொங்கிக் கொண்டிருக்கின்றது.
ஐந்து முறை சாம்பியனான அணி, இந்த சீசனில் எந்த துறையிலும் பிரகாசிக்கவிலலை, மோசமான ஃபார்ம் மற்றும் வீரர்களின் நிலையற்ற செயல் திறனால் பாதிக்கப்பட்டுள்ளது.
புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
இதற்கு நேர்மாறாக, PBKS அணியானது சீசனில் ஐந்து வெற்றிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
மேலும், மனச்சோர்வடைந்த CSK அணியை தோற்கடிப்பதன் மூலம் தங்கள் நிலையை மேலும் உயர்த்திக் கொள்ள முயலும்.
ஐ.பி.எல். அரங்கில் இரு அணிகளும் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.
அதில் CSK அணியானது 17 வெற்றிகளையும், PBKS அணியானது 14 வெற்றிகளையும் பெற்றுள்ளன.