IPL 2025; பெங்களூரு – பஞ்சாப் இடையிலான போட்டி இன்று! – Athavan News

2025 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று (18) நடைபெறும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியானது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 34 ஆவது போட்டியான இந்த ஆட்டம் இன்றிரவு 07.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இந்த சீசனில் RCB மற்றும் PBKS ஆகிய அணிகள் இரண்டும் தலா நான்கு வெற்றிகளையும், இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளன.

எனினும், நிகர ஓட்ட விகிதத்தில் RCB அணியானது புள்ளிகள் தரவரிசையில் மூன்றாவது இடத்திலும், PBKS அணியானது நான்காவது இடத்திலும் உள்ளன.

மேலும், இரு அணிகளின் தலைவர்களும் தொடர்ந்து ஆட்டங்களில் பிரகாசித்து வருகின்றனர்.
இரு அணிகளிலும் அதிரடி தொடக்க வீரர்கள் உச்சத்தில் உள்ளனர்.

எனவே, இன்றைய ஆட்டமானது விறுவிறுப்பாக அமையவுள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் மோதியுள்ளன.

அதில் PBKS அணி 17 முறையும், RCB 16 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

எனினும் சின்னசாமி மைதானத்தில் PBKS அணிக்கு எதிரான 12 போட்டிகளில் 7 முறை வென்ற RCB அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நன்றி

Leave a Reply

error: Content is protected !!